96குடிமை
Nobility • Kutimai
Nobility • Kutimai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
Right-sense and bashfulness adorn By nature only the noble-born
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
The noble-born lack not these three: Good conduct, truth and modesty
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
Smile, gift, sweet words and courtesy These four mark true nobility
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
Even for crores, the noble mood Cannot bend to degrading deed
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
The means of gift may dwindle; yet Ancient homes guard their noble trait
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
Who guard their family prestige pure Stoop not to acts of cunning lure
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
The faults of nobly-born are seen Like on the sky the spots of moon
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
If manners of the good are rude People deem their pedigree crude
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
Soil's nature is seen in sprout The worth of birth from words flow out
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
All gain good name by modesty Nobility by humility
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 96 is "Nobility" (குடிமை). This chapter covers Kurals 951-960.
Adhigaram 96 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Miscellaneous (குடியியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 951 to Thirukkural 960.
The opening verse is Thirukkural 951: "இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.". Its English translation begins: "Right-sense and bashfulness adorn By nature only the noble-born".