92வரைவின் மகளிர்
Wanton Women • Varaivinmakalir
Wanton Women • Varaivinmakalir
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
Avoid ill-natured whores who feign Love only for their selfish gain
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதல் பிணந்தழீஇ அற்று.
The false embrace of whores is like That of a damned corpse in the dark
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
The wise who seek the wealth of grace Look not for harlots' low embrace
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
The lofty wise will never covet The open charms of a vile harlot
தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
Those who guard their worthy fame Shun the wanton's vaunting charm
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
Hollow hearts alone desire The arms of whores with hearts elsewere
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
Senseless fools are lured away By arms of sirens who lead astray
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
The soft jewelled arms of whores are hell Into which the degraded fall
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
Double-minded whores, wine and dice Are lures of those whom fortune flies
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 92 is "Wanton Women" (வரைவின் மகளிர்). This chapter covers Kurals 911-920.
Adhigaram 92 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 911 to Thirukkural 920.
The opening verse is Thirukkural 911: "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.". Its English translation begins: "For gold, not love their tongue cajoles Men are ruined by bangled belles".