93கள்ளுண்ணாமை
Not Drinking Palm-Wine • Kallunnaamai
Not Drinking Palm-Wine • Kallunnaamai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
Foes fear not who for toddy craze The addicts daily their glory lose
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
Drink not liquor; but let them drink Whom with esteem the wise won't think
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
The drunkard's joy pains ev'n mother's face How vile must it look for the wise?
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
Good shame turns back from him ashamed Who is guilty of wine condemned
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
To pay and drink and lose the sense Is nothing but rank ignorance
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
They take poison who take toddy And doze ev'n like a dead body
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
The secret drunkards' senses off Make the prying public laugh
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
Don't say I'm not a drunkard hard The hidden fraud is known abroad
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
Can torch search one in water sunk? Can reason reach the raving drunk?
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
The sober seeing the drunkard's plight On selves can't they feel same effect?
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 93 is "Not Drinking Palm-Wine" (கள்ளுண்ணாமை). This chapter covers Kurals 921-930.
Adhigaram 93 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 921 to Thirukkural 930.
The opening verse is Thirukkural 921: "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்.". Its English translation begins: "Foes fear not who for toddy craze The addicts daily their glory lose".