94சூது
Gambling • Soodhu
Gambling • Soodhu
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
Avoid gambling, albeit you win Gulping bait-hook what does fish gain?
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
Can gamblers in life good obtain Who lose a hundred one to gain?
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
If kings indulge in casting dice All their fortune will flow to foes
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
Nothing will make you poor like game Which adds to woes and ruins fame
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
The game, game-hall and gambler's art Who sought with glee have come to nought
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
Men swallowed by the ogress, dice Suffer grief and want by that vice
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
If men their time in game-den spend Ancestral wealth and virtues end
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
Game ruins wealth and spoils grace Leads to lies and wretched woes
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
Dress, wealth, food, fame, learning-these five In gambler's hand will never thrive
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
Love for game grows with every loss As love for life with sorrows grows
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 94 is "Gambling" (சூது). This chapter covers Kurals 931-940.
Adhigaram 94 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Friendship (நட்பியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 931 to Thirukkural 940.
The opening verse is Thirukkural 931: "வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.". Its English translation begins: "Avoid gambling, albeit you win Gulping bait-hook what does fish gain?".