4அறன் வலியுறுத்தல்
Assertion of the Strength of Virtue • Aran Valiyuruththal
Assertion of the Strength of Virtue • Aran Valiyuruththal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
From virtue weal and wealth outflow; What greater good can mankind know?
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
Perform good deeds as much you can Always and everywhere, o man!
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
In spotless mind virtue is found And not in show and swelling sound
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
Four ills eschew and virtue reach, Lust, anger, envy, evil-speech
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
Do good enow; defer it not A deathless aid in death if sought
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
Litter-bearer and rider say Without a word, the fortune's way
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
Like stones that block rebirth and pain Are doing good and good again
அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
Weal flows only from virtue done The rest is rue and renown gone
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
Worthy act is virtue done Vice is what we ought to shun
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 4 is "Assertion of the Strength of Virtue" (அறன் வலியுறுத்தல்). This chapter covers Kurals 31-40.
Adhigaram 4 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Prologue (பாயிரவியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 31 to Thirukkural 40.
The opening verse is Thirukkural 31: "சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.". Its English translation begins: "From virtue weal and wealth outflow; What greater good can mankind know?".