Thirukkural

38

அறத்துப்பால்பாயிரவியல்அறன் வலியுறுத்தல்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Transliteration:

Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan

Vaazhnaal Vazhiyataikkum Kal

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)பாயிரவியல்Prologue • Paayiraviyal
அதிகாரம் (Topic)அறன் வலியுறுத்தல்Assertion of the Strength of Virtue • Aran Valiyuruththal

English Translation

Like stones that block rebirth and pain Are doing good and good again

Couplet

If no day passing idly, good to do each day you toil,A stone it will be to block the way of future days of moil

Explanation

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை

அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

பரிமேலழகர் உரை

வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன

அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன

மணக்குடவர் உரை

ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அறம் செய்யாத நாளே இல்லாமல் ஒருவன் நடந்துகொள்ளுவானானால், அது அவன் மீண்டும் உடம்போடு பிறத்தில் என்னும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாகும்.

thirukkural.site