Thirukkural
அறத்துப்பால்இல்லறவியல்இனியவை கூறல்
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
Transliteration:
Nayan Eendru Nandri Payakkum
Payaneendru Panpin Thalaippiriyaach Chol
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)இனியவை கூறல்The Utterance of Pleasant Words • Iniyavaikooral
English Translation
The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds
Couplet
The words of sterling sense, to rule of right that strict adhere,To virtuous action prompting, blessings yield in every sphere
Explanation
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)
thirukkural.site
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்
பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.
நற்பயனைக் கொடுத்து இனிமையான நற்பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள் நீதியினையும் அறத்தினையும் கொடுக்கும்.