Thirukkural
பொருட்பால்நட்பியல்பகைத்திறம் தெரிதல்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
Transliteration:
Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)பகைத்திறம் தெரிதல்Knowing the Quality of Hate • Pakaiththirandheridhal
English Translation
Cut off thorn-trees when young they are; Grown hard, they cut your hands beware
Couplet
Destroy the thorn, while tender point can work thee no offence;Matured by time, 'twill pierce the hand that plucks it thence
Explanation
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller
thirukkural.site
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும். மு.வ உரை
நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.
முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.).
முள்மரத்தை இளைதாகவே களைக