Thirukkural
பொருட்பால்நட்பியல்பகைத்திறம் தெரிதல்
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
Transliteration:
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)பகைத்திறம் தெரிதல்Knowing the Quality of Hate • Pakaiththirandheridhal
English Translation
To those who know not, tell not your pain Nor your weakness to foes explain
Couplet
To those who know them not, complain not of your woes;Nor to your foeman's eyes infirmities disclose
Explanation
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes
thirukkural.site
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது. மு.வ உரை
நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.
நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்¢ததனைத் தாமாக அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க
மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவர்மாட்டு அவ்வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க. ('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர், ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண் தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன் கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும் செய்வது கூறப்பட்டது.).
தாம் வருத்த முற்றதனை அறியாதார்க்கு வருத்த முற்றுச் சொல்லா தொழிக; அதுபோலப் பகைவரிடத்துத் தமது மென்மையைத் தோற்றுவித்தலை விரும்பாதொழிக. இது பகைவர்மாட்டுத் தமது மென்மையைத் தோற்றுவியா தொழிகவென்றது. Translation