Thirukkural
பொருட்பால்நட்பியல்பகைத்திறம் தெரிதல்
தேறனும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
Transliteration:
Thera�num Theraa Vitinum Azhivinkan
Theraan Pakaaan Vital
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)பகைத்திறம் தெரிதல்Knowing the Quality of Hate • Pakaiththirandheridhal
English Translation
Trust or distrust; during distress Keep aloof; don't mix with foes
Couplet
Whether you trust or not, in time of sore distress,Questions of diff'rence or agreement cease to press
Explanation
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)
thirukkural.site
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும். மு.வ உரை
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தௌ¤ந்தானாயினும் தௌ¤ந்திலனாயினும்
அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தௌ¤ந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தௌ¤ந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.).
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று. Translation