Thirukkural

849

பொருட்பால்நட்பியல்புல்லறிவாண்மை

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

Transliteration:

Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan

Kantaanaam Thaankanta Vaaru

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)புல்லறிவாண்மைIgnorance • Pullarivaanmai

English Translation

Sans Self-sight in vain one opens Sight To the blind who bet their sight as right

Couplet

That man is blind to eyes that will not see who knowledge shows;-The blind man still in his blind fashion knows

Explanation

One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit"

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

பரிமேலழகர் உரை

காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்

காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.).

மணக்குடவர் உரை

அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்

thirukkural.site