Thirukkural

83

அறத்துப்பால்இல்லறவியல்விருந்தோம்பல்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

Transliteration:

Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai

Paruvandhu Paazhpatudhal Indru

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)விருந்தோம்பல்Hospitality • Virundhompal

English Translation

Who tends his guests day in and out His life in want never wears out

Couplet

Each day he tends the coming guest with kindly care;Painless, unfailing plenty shall his household share

Explanation

The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

பரிமேலழகர் உரை

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றுபவனுடைய இல்வாழ்க்கையானது வறுமையால் துன்புற்றுக் கெடுவது இல்லையாகும்.

thirukkural.site