Thirukkural

822

பொருட்பால்நட்பியல்கூடா நட்பு

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

Transliteration:

Inampondru Inamallaar Kenmai Makalir

Manampola Veru Patum

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)கூடா நட்புUnreal Friendship • Kootaanatpu

English Translation

Who pretend kinship but are not Their friendship's fickle like woman's heart

Couplet

Friendship of those who seem our kin, but are not really kindWill change from hour to hour like woman's mind

Explanation

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

பரிமேலழகர் உரை

இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது. Translation

thirukkural.site