Thirukkural

817

பொருட்பால்நட்பியல்தீ நட்பு

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.

Transliteration:

Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal

Paththatuththa Koti Urum

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)தீ நட்புEvil Friendship • Thee Natpu

English Translation

Ten-fold crore you gain from foes Than from friends who are vain laughers

Couplet

From foes ten million fold a greater good you gain,Than friendship yields that's formed with laughers vain

Explanation

What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

சாலமன் பாப்பையா உரை

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

பரிமேலழகர் உரை

நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு

ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி

மணக்குடவர் உரை

நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது. Translation

thirukkural.site