Thirukkural

816

பொருட்பால்நட்பியல்தீ நட்பு

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

Transliteration:

Pedhai Perungezheei Natpin Arivutaiyaar

Edhinmai Koti Urum

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)நட்பியல்Friendship • Natpiyal
அதிகாரம் (Topic)தீ நட்புEvil Friendship • Thee Natpu

English Translation

Million times the wise man's hate Is better than a fool intimate

Couplet

Better ten million times incur the wise man's hate,Than form with foolish men a friendship intimate

Explanation

The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

பரிமேலழகர் உரை

பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று. ( 'கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையாயினும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'என்று பாடம் ஓதுவாரும் உளர்.) .

மணக்குடவர் உரை

அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிவுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும். இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது. Translation

thirukkural.site