Thirukkural

769

பொருட்பால்படையில்படை மாட்சி

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

Transliteration:

Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum

Illaayin Vellum Patai

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)படையில்The Excellence of an Army • Padaiyil
அதிகாரம் (Topic)படை மாட்சிThe Excellence of an Army • Pataimaatchi

English Translation

Army shall win if it is free From weakness, aversion, poverty

Couplet

Where weakness, clinging fear and povertyAre not, the host will gain the victory

Explanation

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.

சாலமன் பாப்பையா உரை

எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.

பரிமேலழகர் உரை

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்

படைவெல்லும் - படை பகையை வெல்லும். (விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது

மணக்குடவர் உரை

தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும். Translation

thirukkural.site