Thirukkural

731

பொருட்பால்அரணியல்நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.

Transliteration:

Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach

Chelvarum Servadhu Naatu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரணியல்The Essentials of a State • Araniyal
அதிகாரம் (Topic)நாடுThe Land • Naatu

English Translation

It's country which has souls of worth Unfailing yields and ample wealth

Couplet

Where spreads fertility unfailing, where resides a band,Of virtuous men, and those of ample wealth, call that a 'land'

Explanation

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை

குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

பரிமேலழகர் உரை

தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்; தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு வாழ்வதே நாடாவது

(மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை

மணக்குடவர் உரை

தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்வது நாடு. தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம். Translation

thirukkural.site