Thirukkural

726

பொருட்பால்அமைச்சியல்அவை அஞ்சாமை

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

Transliteration:

Vaaloten Vankannar Allaarkku Nooloten

Nunnavai Anju Pavarkku

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அமைச்சியல்Minister of State • Amaichiyal
அதிகாரம் (Topic)அவை அஞ்சாமைNot to dread the Council • Avaiyanjaamai

English Translation

To cowards what can sword avail And books to those who councils fail?

Couplet

To those who lack the hero's eye what can the sword availOr science what, to those before the council keen who quail

Explanation

What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.

பரிமேலழகர் உரை

வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.).

மணக்குடவர் உரை

வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது. Translation

thirukkural.site