Thirukkural

706

பொருட்பால்அமைச்சியல்குறிப்பறிதல்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.

Transliteration:

Atuththadhu Kaattum Palingupol Nenjam

Katuththadhu Kaattum Mukam

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அமைச்சியல்Minister of State • Amaichiyal
அதிகாரம் (Topic)குறிப்பறிதல்The Knowledge of Indications • Kuripparidhal

English Translation

What throbs in mind the face reflects Just as mirror nearby objects

Couplet

As forms around in crystal mirrored clear we find,The face will show what's throbbing in the mind

Explanation

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

சாலமன் பாப்பையா உரை

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

பரிமேலழகர் உரை

அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.).

மணக்குடவர் உரை

தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும். இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது. Translation

thirukkural.site