71குறிப்பறிதல்
The Knowledge of Indications • Kuripparidhal
The Knowledge of Indications • Kuripparidhal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
Take him as God who reads the thought Of another man with without a doubt
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
By sign who scans the sign admit At any cost in cabinet
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
Untold, he who divines the thought Though same in form is quite apart
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
Among senses what for is eye If thought by thought one can't descry?
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
What throbs in mind the face reflects Just as mirror nearby objects
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
Than face what is subtler to tell First if the mind feels well or ill
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
Just standing in front would suffice For those who read the mind on face
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
Friend or foe the eyes will show To those who changing outlooks know
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
The scale of keen discerning minds Is eye and eye that secrets finds
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 71 is "The Knowledge of Indications" (குறிப்பறிதல்). This chapter covers Kurals 701-710.
Adhigaram 71 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Minister of State (அமைச்சியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 701 to Thirukkural 710.
The opening verse is Thirukkural 701: "கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி.". Its English translation begins: "Who reads the mind by look, untold Adorns the changeless sea-girt world".