Thirukkural

57

அறத்துப்பால்இல்லறவியல்வாழ்க்கைத் துணைநலம்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.

Transliteration:

Siraikaakkum Kaappevan Seyyum Makalir

Niraikaakkum Kaappe Thalai

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)வாழ்க்கைத் துணைநலம்The Worth of a Wife • Vaazhkkaith Thunainalam

English Translation

Of what avail are watch and ward? Their purity is women's guard

Couplet

Of what avail is watch and ward?Honour's woman's safest guard

Explanation

What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

சாலமன் பாப்பையா உரை

இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

பரிமேலழகர் உரை

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை

மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை

மணக்குடவர் உரை

மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மகளிரைச் சிறைவைத்துக் காத்தல் என்பது என்ன பயனைச் செய்ய முடியும்? நிறையென்னும் கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதே தலையான காப்பாகும்.

thirukkural.site