Thirukkural

560

பொருட்பால்அரசியல்கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

Transliteration:

Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar

Kaavalan Kaavaan Enin

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கொடுங்கோன்மைThe Cruel Sceptre • Kotungonmai

English Translation

The *six-functioned forget their lore Cows give less if kings guard no more * the six functions are: learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice These are duties of Vedic savants

Couplet

Where guardian guardeth not, udder of kine grows dry,And Brahmans' sacred lore will all forgotten lie

Explanation

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz, the Brahmins will forget the vedas

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

பரிமேலழகர் உரை

காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்

ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன

மணக்குடவர் உரை

பசுக்கள் பால் குறையும்

thirukkural.site