Thirukkural

554

பொருட்பால்அரசியல்கொடுங்கோன்மை

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

Transliteration:

Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich

Choozhaadhu Seyyum Arasu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கொடுங்கோன்மைThe Cruel Sceptre • Kotungonmai

English Translation

The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse

Couplet

Whose rod from right deflects, who counsel doth refuse,At once his wealth and people utterly shall lose

Explanation

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

பரிமேலழகர் உரை

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப).

மணக்குடவர் உரை

பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன். இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று. Translation

thirukkural.site