Thirukkural

542

பொருட்பால்அரசியல்செங்கோன்மை

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.

Transliteration:

Vaanokki Vaazhum Ulakellaam Mannavan

Kol Nokki Vaazhung Kuti

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)செங்கோன்மைThe Right Sceptre • Sengonmai

English Translation

The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice

Couplet

All earth looks up to heav'n whence raindrops fall;All subjects look to king that ruleth all

Explanation

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

கலைஞர் மு.கருணாநிதி உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. மு.வ உரை

சாலமன் பாப்பையா உரை

உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

பரிமேலழகர் உரை

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை

உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர். Translation

thirukkural.site