Thirukkural

533

பொருட்பால்அரசியல்பொச்சாவாமை

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

Transliteration:

Pochchaappaark Killai Pukazhmai Adhuulakaththu

Eppaalnoo Lorkkum Thunivu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)பொச்சாவாமைUnforgetfulness • Pochchaavaamai

English Translation

Forgetful nature fails of fame All schools of thinkers say the same

Couplet

'To self-oblivious men no praise'; this ruleDecisive wisdom sums of every school

Explanation

Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

சாலமன் பாப்பையா உரை

மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.

பரிமேலழகர் உரை

பொச்சாப்பார்க்குப் புகழ்மை இல்லை - பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை, அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு - அவ்வின்மை இந்நீதி நூலுடையார்க்கேயன்றி உலகத்து எவ்வகைப்பட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. (அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.).

மணக்குடவர் உரை

பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு. இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது. Translation

thirukkural.site