Thirukkural

532

பொருட்பால்அரசியல்பொச்சாவாமை

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

Transliteration:

Pochchaappuk Kollum Pukazhai Arivinai

Nichcha Nirappuk Kon Raangu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)பொச்சாவாமைUnforgetfulness • Pochchaavaamai

English Translation

Negligence kills renown just as Ceaseless want wisdom destroys

Couplet

Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies

Explanation

Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

பரிமேலழகர் உரை

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், அறிவினை நிச்சநிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. (நிச்ச நிரப்பு

நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்

மணக்குடவர் உரை

மறவியாகின்றது புகழைக்கொல்லும்

thirukkural.site