Thirukkural

526

பொருட்பால்அரசியல்சுற்றந் தழால்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல்.

Transliteration:

Perungotaiyaan Penaan Vekuli Avanin

Marungutaiyaar Maanilaththu Il

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)சுற்றந் தழால்Cherishing Kinsmen • Sutrandhazhaal

English Translation

Large giver and wrathless man Commands on earth countless kinsmen

Couplet

Than one who gifts bestows and wrath restrains,Through the wide world none larger following gains

Explanation

No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

பரிமேலழகர் உரை

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. (மிக்க கொடை

ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை

மணக்குடவர் உரை

மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை. இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது. Translation

thirukkural.site