Thirukkural

51

அறத்துப்பால்இல்லறவியல்வாழ்க்கைத் துணைநலம்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

Transliteration:

Manaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan

Valaththakkaal Vaazhkkaith Thunai

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)வாழ்க்கைத் துணைநலம்The Worth of a Wife • Vaazhkkaith Thunainalam

English Translation

A good housewife befits the house, Spending with thrift the mate's resource

Couplet

As doth the house beseem, she shows her wifely dignity;As doth her husband's wealth befit, she spends: help - meet is she

Explanation

She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

சாலமன் பாப்பையா உரை

பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணை ஆகிய இல்லாளது நன்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.) மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன

துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன

மணக்குடவர் உரை

தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மனையறத்திருக்குத் தகுந்த நற்குண நற்செய்கையான சிறப்பின்னையுடையவளாகித் தன்னைத் கொண்டவனது வரவுக்குத் தகுந்தபடி வாழ்பவளே வாழ்க்கைத் துணைவியாவாள்.

thirukkural.site