Thirukkural

45

அறத்துப்பால்இல்லறவியல்இல்வாழ்க்கை

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

Transliteration:

Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai

Panpum Payanum Adhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)இல்வாழ்க்கைDomestic Life • Ilvaazhkkai

English Translation

In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells

Couplet

If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain

Explanation

If the married life possess love and virtue, these will be both its duty and reward

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சாலமன் பாப்பையா உரை

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

பரிமேலழகர் உரை

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

இல்லற வாழ்க்கையானது அன்பினையும் அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும் பயனுமாகும்.

thirukkural.site