Thirukkural

446

பொருட்பால்அரசியல்பெரியாரைத் துணைக்கோடல்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

Transliteration:

Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich

Chetraar Seyakkitandha Thil

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)பெரியாரைத் துணைக்கோடல்Seeking the Aid of Great Men • Periyaaraith Thunaikkotal

English Translation

To move with worthy friends who knows Has none to fear from frightful foes

Couplet

The king, who knows to live with worthy men allied,Has nought to fear from any foeman's pride

Explanation

There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

பரிமேலழகர் உரை

தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை. (தக்கார்

அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்

மணக்குடவர் உரை

தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை. இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்லவர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லையாகும்.

thirukkural.site