Thirukkural

433

பொருட்பால்அரசியல்குற்றங்கடிதல்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வர் பழிநாணு வார்.

Transliteration:

Thinaiththunaiyaang Kutram Varinum Panaiththunaiyaak

Kolvar Pazhinaanu Vaar

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)குற்றங்கடிதல்The Correction of Faults • Kutrangatidhal

English Translation

Though millet-small their faults might seem Men fearing disgrace, Palm-tall deem

Couplet

Though small as millet-seed the fault men deem;As palm tree vast to those who fear disgrace 'twill seem

Explanation

Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை

பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

பரிமேலழகர் உரை

பழி நாணுவார் - பழியை அஞ்சுவார், தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் - தம்கண் தினையின் அளவாம் குற்றம் வந்ததாயினும், அதனை அவ்வளவாக அன்றிப் பனையின் அளவாகக் கொள்வர். (குற்றம் சாதிப்பெயர். தமக்கு ஏலாமையின் சிறிது என்று பொறார், பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அதுவாராமல் காப்பர் என்பதாம்.).

மணக்குடவர் உரை

தினையளவு குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவிற்றென்று இகழாது பனையளவாகக் கொள்வர் பழிக்கு நாணுவார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பழிக்கு நான்முற்று அஞ்சுபவர்கள் தினையளவு சிறிதான குற்றமானது தங்களிடத்தில் உண்டானாலும் அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவார்கள்.

thirukkural.site