Thirukkural

421

பொருட்பால்அரசியல்அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

Transliteration:

Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum

Ullazhikka Laakaa Aran

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)அறிவுடைமைThe Possession of Knowledge • Arivutaimai

English Translation

Wisdom's weapon wards off all woes It is a fort defying foes

Couplet

True wisdom wards off woes, A circling fortress high;Its inner strength man's eager foes Unshaken will defy

Explanation

Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா உரை

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

பரிமேலழகர் உரை

அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அறிவு என்பது இறுதி வாராமல் காப்பாற்றுகின்ற கருவியாகும். பகைவர்களாலும் அழிக்க முடியாத உள்ளிருப்பதாகிய காவலிடமென்னும் கோட்டையாகும்.

thirukkural.site