Thirukkural

418

பொருட்பால்அரசியல்கேள்வி

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

Transliteration:

Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal

Thotkap Pataadha Sevi

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கேள்விHearing • Kelvi

English Translation

That ear though hearing is dulled Which is not by wisdom drilled

Couplet

Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear

Explanation

The ear which has not been bored by instruction, although it hears, is deaf

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

கலைஞர் மு.கருணாநிதி உரை

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

சாலமன் பாப்பையா உரை

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

பரிமேலழகர் உரை

கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை

ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது. Translation

thirukkural.site