Thirukkural

391

பொருட்பால்அரசியல்கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

Transliteration:

Karka Kasatarak Karpavai Katrapin

Nirka Adharkuth Thaka

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கல்விLearning • Kalvi

English Translation

Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly

Couplet

So learn that you may full and faultless learning gain,Then in obedience meet to lessons learnt remain

Explanation

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

பரிமேலழகர் உரை

கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது

விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது

மணக்குடவர் உரை

கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.

thirukkural.site