Thirukkural

387

பொருட்பால்அரசியல்இறைமாட்சி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு.

Transliteration:

Insolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal

Thaankan Tanaiththiv Vulaku

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)இறைமாட்சிThe Greatness of a King • Iraimaatchi

English Translation

The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace

Couplet

With pleasant speech, who gives and guards with powerful liberal hand,He sees the world obedient all to his command

Explanation

The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

சாலமன் பாப்பையா உரை

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

பரிமேலழகர் உரை

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம். (இன்சொல்

கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்

மணக்குடவர் உரை

இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து காப்பாற்ற வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தனது புகழோடு பொருந்தி அவன் எண்ணிய அளவில் இருக்கும்.

thirukkural.site