Thirukkural

233

அறத்துப்பால்இல்லறவியல்புகழ்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.

Transliteration:

Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal

Pondraadhu Nirpadhon Ril

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)புகழ்Renown • Pukazh

English Translation

Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!

Couplet

Save praise alone that soars on high,Nought lives on earth that shall not die

Explanation

There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.

பரிமேலழகர் உரை

ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது

கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி 'ஒன்றா' என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை

உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை. இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நிகரில்லாத ஓங்கிய புகழல்லாமல் இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது வேறு எதுவும் இல்லை.

thirukkural.site