Thirukkural

181

அறத்துப்பால்இல்லறவியல்புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

Transliteration:

Arangooraan Alla Seyinum Oruvan

Purangooraan Endral Inidhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)புறங்கூறாமைNot Backbiting • Purangooraamai

English Translation

Though a man from virtue strays, To keep from slander brings him praise

Couplet

Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still

Explanation

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.

சாலமன் பாப்பையா உரை

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.) ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒருவன் அறத்தினைச் செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூடப் 'புறங்கூறாதவன்' என்று மக்களால் சொல்லப்படுதல் நல்லதாகும்.

thirukkural.site