Thirukkural

18

அறத்துப்பால்பாயிரவியல்வான்சிறப்பு

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

Transliteration:

Sirappotu Poosanai Sellaadhu Vaanam

Varakkumel Vaanorkkum Eentu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)பாயிரவியல்Prologue • Paayiraviyal
அதிகாரம் (Topic)வான்சிறப்புThe Blessing of Rain • Vaansirappu

English Translation

The earth, beneath a barren sky, Would offerings for the gods deny

Couplet

If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore

Explanation

If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.

சாலமன் பாப்பையா உரை

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

பரிமேலழகர் உரை

வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

மணக்குடவர் உரை

சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.

thirukkural.site