Thirukkural
அறத்துப்பால்இல்லறவியல்அழுக்காறாமை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
Transliteration:
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)அழுக்காறாமைNot Envying • Azhukkaaraamai
English Translation
The wise through envy don't others wrong Knowing that woes from evils throng
Couplet
The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause
Explanation
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds
thirukkural.site
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன
செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.).
அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்
பொறாமையினால் தமக்குத் துன்பம் வருவதை அறிந்தவர்கள், பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.