Thirukkural
காமத்துப்பால்கற்பியல்ஊடலுவகை
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
Transliteration:
Ootip Perukuvam Kollo Nudhalveyarppak
Kootalil Thondriya Uppu
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Topic)ஊடலுவகைThe Pleasures of Temporary Variance • Ootaluvakai
English Translation
Shall not our pouting again give The dew-browed joy of joint love?
Couplet
And shall we ever more the sweetness know of that embraceWith dewy brow; to which 'feigned anger' lent its piquant grace
Explanation
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
thirukkural.site
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
இப்பெண்ணின் நுதல் வெயர்க்கும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உளதாகிய இனிமையை இன்னும் ஒருமுறை இவள் ஊடி யாம் பெறுவோமோ?.