Thirukkural

126

அறத்துப்பால்இல்லறவியல்அடக்கம் உடைமை

ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுநம்யும் ஏமாப் புடைத்து.

Transliteration:

Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin

Ezhumaiyum Emaap Putaiththu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)அடக்கம் உடைமைThe Possession of Self-restraint • Atakkamutaimai

English Translation

Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold

Couplet

Like tortoise, who the five restrainsIn one, through seven world bliss obtains

Explanation

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

பரிமேலழகர் உரை

ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

ஒரு பிறப்பில் ஆமையினைப் போல மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி வாழும் வல்லமை பெற்றிந்தால் அவ்வல்லமை எழுகின்ற பிறவிகளில் எல்லாம் பாதுகாப்பு உடையதாகும்.

thirukkural.site