Thirukkural

122

அறத்துப்பால்இல்லறவியல்அடக்கம் உடைமை

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

Transliteration:

Kaakka Porulaa Atakkaththai Aakkam

Adhaninooung Killai Uyirkku

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)அடக்கம் உடைமைThe Possession of Self-restraint • Atakkamutaimai

English Translation

No gains with self-control measure Guard with care this great treasure

Couplet

Guard thou as wealth the power of self-control;Than this no greater gain to living soul

Explanation

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

பரிமேலழகர் உரை

உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.).

மணக்குடவர் உரை

ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்தல் வேண்டும். ஏனெனில், மக்களுயிர்க்குச் செல்வாய் பெருக்கமானது அதனைவிடப் பிறிது யாதும் இல்லை.

thirukkural.site