Thirukkural

119

அறத்துப்பால்இல்லறவியல்நடுவு நிலைமை

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

Transliteration:

Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa

Utkottam Inmai Perin

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)நடுவு நிலைமைImpartiality • Natuvu Nilaimai

English Translation

Justice is upright, unbending And free from crooked word-twisting

Couplet

Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess

Explanation

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

சாலமன் பாப்பையா உரை

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

பரிமேலழகர் உரை

செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல்

ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.).

மணக்குடவர் உரை

நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நடுவு நிலைமை என்பது சொல்லுகிற சொல்லிலில் கோணுதல் இல்லாமல் இருத்தலாகும். மனத்தினிடத்தில் கோணுதல் இல்லாமலிருப்பதைத் திண்ணியதாகப் பெற்றிருந்தால் அதுவும் நன்மை பயப்பதாகும்.

thirukkural.site