Thirukkural

1182

காமத்துப்பால்கற்பியல்பசப்புறு பருவரல்

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

Transliteration:

Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen

Menimel Oorum Pasappu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)கற்பியல்The Post-marital love • Karpiyal
அதிகாரம் (Topic)பசப்புறு பருவரல்The Pallid Hue • Pasapparuparuvaral

English Translation

Claiming it is begot through him Pallor creeps and rides over my frame

Couplet

'He gave': this sickly hue thus proudly speaks,Then climbs, and all my frame its chariot makes

Explanation

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.

சாலமன் பாப்பையா உரை

இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

பரிமேலழகர் உரை

(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).

மணக்குடவர் உரை

காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

இந்தப் பசப்பு நிறம், அவர் உண்டாக்கினார் என்கின்ற பெருமதத்தால் என் உடம்பின் மீது ஊர்ந்து செல்லுகின்றது.

thirukkural.site