Thirukkural

1145

காமத்துப்பால்களவியல்அலர் அறிவுறுத்தல்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

Transliteration:

Kaliththorum Kalluntal Vettatraal Kaamam

Velippatun Thorum Inidhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Topic)அலர் அறிவுறுத்தல்The Announcement of the Rumour • Alararivuruththal

English Translation

Drink delights as liquor flows Love delights as rumour grows

Couplet

The more man drinks, the more he ever drunk would be;The more my love's revealed, the sweeter 'tis to me

Explanation

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) களித்தொறும் கள் உண்டல் வேட்டற்று - கள்ளுண்பார்க்குக் களிக்குந்தோறும் கள்ளுண்டல் இனிதாமாறு போல; காமம் வெளிப்படுந்தோறும் இனிது - எனக்குக் காமம் அலராந்தோறும் இனிதாகா நின்றது. ('வேட்கப்பட்டடற்றால்' என்பது 'வேட்டற்றால்' என நின்றது. வேட்கை மிகுதியால் அலரும் இன்பஞ் செய்யாநின்றது என்பதாம்.).

மணக்குடவர் உரை

மயங்குந்தோறும் கள்ளுண்டலை விரும்பினாற்போலக் காமமும் அலராகுந்தோறும் இனிதாகும். இஃது அலரறிவுறுத்த தோழியை நோக்கி நுமக்குத் துன்ப மாயிற்றே இவ்வலரென்று வினாவிய தலைமகற்குத் தோழி கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

கள் உண்பவர்களுக்குக் களிக்கும் போதெல்லாம் கள்ளுண்டல் இனிதாவதைப்போல எனக்குக் காமம் அலரால் வெளிப்படும்போதெல்லாம் இனிமையானதாக இருக்கின்றது.

thirukkural.site