Thirukkural

1118

காமத்துப்பால்களவியல்நலம் புனைந்து உரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மத஧.

Transliteration:

Maadhar Mukampol Olivita Vallaiyel

Kaadhalai Vaazhi Madhi

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Topic)நலம் புனைந்து உரைத்தல்The Praise of her Beauty • Nalampunaindhuraiththal

English Translation

Like my lady's face if you shine All my love to you; hail O moon!

Couplet

Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine

Explanation

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

சாலமன் பாப்பையா உரை

நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.).

மணக்குடவர் உரை

மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது. Translation

thirukkural.site