Thirukkural

1100

காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

Transliteration:

Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal

Enna Payanum Ila

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Topic)குறிப்பறிதல்Recognition of the Signs • Kuripparidhal

English Translation

The words of mouth are of no use When eye to eye agrees the gaze

Couplet

When eye to answering eye reveals the tale of love,All words that lips can say must useless prove

Explanation

The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

சாலமன் பாப்பையா உரை

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது) கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் - காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்; வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல. (நோக்கால் ஒத்தல்

காதல் நோக்கினவாதல். வாய்ச் சொற்கள்

மணக்குடவர் உரை

கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின் வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல. இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

காதலர் இருவருடைய கண்கள் ஒருவர் கண்களோடு, ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின் அவர்கள் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடையன அல்லவாம்.

thirukkural.site