Thirukkural

1097

காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Transliteration:

Seraaach Chirusollum Setraarpol Nokkum

Uraaarpondru Utraar Kurippu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Topic)குறிப்பறிதல்Recognition of the Signs • Kuripparidhal

English Translation

Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks

Couplet

The slighting words that anger feign, while eyes their love revealAre signs of those that love, but would their love conceal

Explanation

Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை

(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு

ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.).

மணக்குடவர் உரை

செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

பின்னர் இனிதாகவும் முன்னர் இனிமை இல்லாததுமான சொல்லும், மனத்தில் கோபியாதிருந்து புறத்தே கோபித்தார் போன்ற வெகுளி நோக்கும் அயலார் போன்றிருந்து நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவனவாகும்.

thirukkural.site