Thirukkural

1092

காமத்துப்பால்களவியல்குறிப்பறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.

Transliteration:

Kankalavu Kollum Sirunokkam Kaamaththil

Sempaakam Andru Peridhu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)காமத்துப்பால்Love • Kaamaththuppaal
இயல் (Chapter)களவியல்The Pre-marital love • Kalaviyal
அதிகாரம் (Topic)குறிப்பறிதல்Recognition of the Signs • Kuripparidhal

English Translation

Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore

Couplet

The furtive glance, that gleams one instant bright,Is more than half of love's supreme delight

Explanation

A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.

சாலமன் பாப்பையா உரை

நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

பரிமேலழகர் உரை

(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும். (தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.).

மணக்குடவர் உரை

என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது. தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று. Translation

thirukkural.site