Thirukkural

106

அறத்துப்பால்இல்லறவியல்செய்ந்நன்றியறிதல்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Transliteration:

Maravarka Maasatraar Kenmai Thuravarka

Thunpaththul Thuppaayaar Natpu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)அறத்துப்பால்Virtue • Araththuppaal
இயல் (Chapter)இல்லறவியல்Domestic Virtue • Illaraviyal
அதிகாரம் (Topic)செய்ந்நன்றியறிதல்Gratitude • Seynnandri Aridhal

English Translation

Forget not friendship of the pure Forsake not timely helpers sure

Couplet

Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore

Explanation

Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது

கலைஞர் மு.கருணாநிதி உரை

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

பரிமேலழகர் உரை

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை

கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.).

மணக்குடவர் உரை

தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவர் நட்பினை விடாதிருத்தல் வேண்டும். மனத்தில் குற்றமில்லாதவர்களின் உறவுபோன்ற நட்பினை மறவாதிருத்தல் வேண்டும்.

thirukkural.site